Wednesday, July 10, 2013

உறுதிமொழி

நெருப்பு பற்றவைக்க
தீக்குச்சிகள் இருந்தும்
மௌன விரதமிருந்து

திருஷ்டி களைதலுக்கே
திருஷ்டி பொட்டிடும்
நிலை துறந்து

நடை பாதையில்
என்னமெனும்
சிறு கற்களை சிதறடித்து

கற் பனைமரம் பூத்து
காய் கனிகளை
உபயோக பொருட்களாக மாற்ற

இதுவே கடைசி என்று
இன்றும்
உறுதிமொழி கொண்டேன்

-அஸ்கர் 

ஆற்றங்கரையும் ... அவளும்

இம்மாதிரியான
இடத்தில தளிர்

விட்டதற்காக
வெட்கி தலைகுனிந்த

அரளிச் செடியின்
அண்மையில்
வெள்ளை படலமின்றி
கருவிழியே கண்ணாக

வரம் கேட்ட்கும் துரோகிகளுக்கு
மத்தியில்

சிறு நாடகத்தை
அரங்கேற்றியவளின்

மன்னிப்புகளும்
மறுபிறவிகளும்

-அஸ்கர் 

வரும் நாட்களும் ... நானும்

இரவு உணவுக்கு பின்
புகைவண்டிச் சப்தமும்

சாலை ஓரக் கடைகளும்
பதுங்க இடமில்லாத
குப்பைகளும்
எப்பொழுதாவது வரும்
துப்புரவு தொழிலாளியும்

பல்வலியும்
மாடி அறையும்
பண்பாட்டுடன் மருத்துவரும்
ஐந்து தேநீர் கலையமும்

கேலிச் சித்திரமாய்
பாதசாரிகளும்
அழகுப் பெண்களும்
பாதம் பட
பெருமைப்படும் நடைபாதையும்

சாலை எத்தத்தில்
டீக்கடையும்
ஒரு நீள சிகரெட்டும்

தேவை முறிந்து
தூக்கி எறிந்த
பிளாஸ்டிக் பொருட்களும்

மெதுவாக முன்னேறி
போக்குவரத்தை பாதிக்கும்
இருசக்கர ஊர்திகளும்

தெரியாத ஊருக்கு
வழிகேட்ட்கும் பயணியும்

வரும் நாட்களும் ...  நானும் .

- அஸ்கர்

Tuesday, July 9, 2013

கவிதைகள் பாகம் 3

கர்வம் 


மரத்தில் 

ஆசையாய் கூடுகட்ட 
ஆரம்பித்தது காகம் 

"இலையுயிர் காலம்"  அறியாமல் ...


-அஸ்கர்




E - Commerce 


கையில் "cellular" போன் 

பர்சில் "credit" கார்டுடன் 
காரிலிருந்து இறங்கியவன் 

பெட்டிகடையில் வாங்கினான் 

ஒரு "cigarette" 

- அஸ்கர்


பேரழிவு 


இரண்டு மூகில்களின் 

காதலால் 
உண்டான தீ 
காட்டையே அழித்து 

- அஸ்கர்



காதலி

சூறாவெளிக் காற்றில் 
பறக்கும் பறவை 

கடுமையான வெயிலில் 

பாலைவனத்தில் 
ஊர்ந்து செல்லும் பாம்பு 

பெரிய அருவியில் 

குளிக்கும் எறும்பு

சுட்டெரிக்கும் தீயில் 

குதிக்கும் மான் 

காட்சிகள் மாறுமா 

உன்னால் ...

-அஸ்கர்


போர் விமானம்

மேகங்களில்  மறைந்து
மனித  உயிர்களை  பறித்தது

வீடுகளை  நாசம்  செய்தது

அணைக்கட்டுகளை  தகர்தெரிதது

தாவரங்களுக்கு  தீயட்டது

கப்பல்களை  மூழ்கடித்தது

இன்று  "பணிமனையில்"



- அஸ்கர்



தெய்வம்

பகுத்தறிவு மனிதனுக்கு 


பிறந்த 

இறந்த குழந்தை 

-அஸ்கர்






திரைப்பட காட்சி

காரணமில்லாமல் சினிமாவில் 
கட்சிகளை வைபதில்லை 

திரையில் வரும்போதெல்லாம் 

வெறுப்பில் ஒருசிலர்
வெறுப்பின் உச்சத்தில் பலபேர்
மேலும் சிலர் வெளியே வருவதுண்டு

அவர்களுக்கெல்லாம் 

அனுபவமில்லை போலும்

ஒவ்வொருவரின் வாழ்கையில் 

அவைபோல் நிகழத்தான் செய்கின்றன

சிலர் ரசிக்கின்றனர் 

சிலர் வெறுக்கின்றனர் 
இன்னும்
சிலர் ரசிக்கவேண்டிய சூழ்நிலை

-ஆஸ்கர்